விளம்பரம்
முகப்புகோலிவுட்

பாகுபலி இரண்டாம் பாகத்தில் நான்கு கிளைமேக்ஸ் காட்சிகளா?

  | March 18, 2017 11:37 IST
Movies

துனுக்குகள்

  • பாகுபலி -2 டிரையிலர் வெளியாகி பல சாதனைகள் புரிந்து வருகிறது
  • இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
  • கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், படம் பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்
முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி இரண்டாம்’ பாகத்தின் டிரையிலர் சமீபத்தில் வெளியாகி இரண்டே நாளில் பல கோடி பார்வையாளர்களை தாண்டி பெரும் சாதனை புரிந்து வருகிறது.

இந்த நிகழ்வில் இருந்து இப்படத்திற்கு மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து பல்வேறு வதந்திகள் வெளி வருகின்றது. பாகுபலி முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியின் காரணமாக இரண்டாவது பாகத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யபப்ட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. அதிலும் குறிப்பாக பாகுபலி இரண்டாம் பாகத்தில் நான்கு கிளைமேக்ஸ்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளி வந்தன.

இவை அனைத்தையும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி முற்றிலும் மறுத்துள்ளார். மிகப் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு காரணமாக ஒரே ஒரு ஆக்ஷன் காட்சிகள் மட்டும் ஏற்கனவே திட்டமிட்டதை விட சிறிய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அதை தவிர்த்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஆரம்பிக்கும்போது எவ்வாறு திட்டமிட்டோமோ அவ்வாறே திரைப்படம் உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகுபலி இரண்டாம் பாகத்தின் டிரையிலர் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பதை நான் தெரிவிக்கவில்லை, ஆனாலும் படம் பார்ப்பவர்கள் 20 நிமிடங்களில் அதற்கான விடையை தெரிந்துகொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்