விளம்பரம்
முகப்புகோலிவுட்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? விடை திரையில் விரைவில் – பாகுபலி 2 டிரையிலர்

  | April 26, 2017 11:00 IST
Movies

துனுக்குகள்

  • ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமான பாகுபலி - 2 டிரையிலர்
  • ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் இப்பாகத்தில் பதிலுண்டு
  • தமிழ், தெலுகு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் டிரையிலர் வெளியாகியுள்ளது
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘பாகுபலி-2’ படத்தின் டிரையிலர், இன்று மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக 2 நிமிட வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.

சென்ற பாகத்தின் ஃபிளாஷ் பேக்-யை சொல்ல இருக்கும் இந்த பாகத்தின் மீதான மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும், நிறைய கேள்விகள் உள்ளன அதற்கு இப்பாகம் பதில் அளிக்கவும் உள்ளதால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அமேரேந்திர பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? தேவசேனைக்கும் சிவகாமிக்கும் இடையே என்ன பிரச்னை? சிவகாமி ஏன் கைக்குழுந்தையை தூக்கி கொண்டு ஆற்றில் இறங்கினார்? தேவசேனையை ஏன் கைதியாக வைத்திருந்தனர்? இது போன்ற பல கேள்விகளுக்கும் இப்படத்தில் பதில் உண்டு.
தெலுகு மொழியில் தான் இப்படத்தின் முதல் டிரையிலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமார் 250 முதல் 300 திரையரங்குகளில் இந்த டிரையிலரை ஒளிபரப்பு செய்துள்ளனர். தற்பொழுது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரையிலர் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகரித்துள்ளது.

 

டிரையிலரின் தொடக்கத்திலேயே பாகுபலி மகிழ்மதியின் அரச கிரீடத்தின் மீது தன் கை வைத்து தன்னுடைய ரத்தத்தால் பொறுப்பேற்பது போல், அதே வேளையில் மக்களின் முகத்தில் ஏதோ நடக்க கூடாது ஒன்று நடந்தது போலவும் காட்சிகள் நகர்கின்றது, அடுத்த காட்சியில் ஒரு இளம்பெண்ணின் கை இன்னொரு பெண்ணின் காலினை ரத்த கரையுடன் தொடுவது போலவும் அமைந்துள்ளது, அந்த கை அனுஷ்கா என்றும் அந்த கால் ரம்யா கிருஷ்ணன் கூறுகின்றனர், அதன் பின் ரத்தங்கள் சொட்ட சொட்ட ஒரு வாளினை ஒருவர் எடுத்து செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த நொடியே சென்ற பாகத்தின் இறுதியில் கட்டப்பா பாகுபலியை கொன்ற காட்சிகளுடன் முதல் பாகத்தின் பல முக்கிய காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பின் படத்தின் முக்கிய கதாநாயகி அனுஷ்காவின் அறிமுகம், பொதுவாகவே நம் இந்திய சினிமாவில் கதாநாயகியை அறிமுகம் என்பது ஒரு அழகிய மலர்களுக்குளிருந்து வருவது போல காட்சி படுத்தப்பட்டிருக்கும், அதே அழகிய தேவதை கையில் வாளுடன் 10 பேரை துவம்சம் செய்தால் எப்படி இருக்கும், அவ்வாறு தான் அனுஷ்காவிற்கு டிரையிலரில் அறிமுகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

மேலும், ராணாக்கும் பிரபாஸுக்கும் இடையே நடக்கும் சண்டைகள் என பல விஷயங்களை டிரையிலரில் திரையிட்டுள்ளார் இயக்குநர். குறிப்பாக நடிகர் சத்தியராஜ் அவர்களை பார்த்து பிரபாஸ் கூறும் வசனம் இடம் பெற்றுள்ள காட்சிக்கு தியேட்டர்களில் பெரும் கைதட்டல் கிடைக்கிறது. VFX காட்சிகளை நாம் விவரித்து தான் மக்களுக்கு தெரியவைக்க வேண்டும் என்பது இல்லை, முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாகவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகமொத்ததில் இயக்குநர் இந்த டிரையிலரை வெளியிட்டு நமக்கு கூறும் செய்தி என்ன வென்றால் “கண்ணா இது வெறும் டிரையிலர் தான் இன்னும் மெயின் பிக்சர் இருக்கு பார்த்திங்க ஆடிடுவிங்க”

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்