விளம்பரம்
முகப்புகோலிவுட்

'புலி'யை தொடர்ந்து 'பாகுபலி'க்கு ஏற்பட்ட நிலைமை

  | March 17, 2017 11:55 IST
Movies

துனுக்குகள்

  • பல சாதனைகள் புரிந்து வரும் பாகுபலி - 2 டிரையிலர்
  • படம் வெளியாவதற்கு முன்பே பல கோடிகள் வியாபாரமானதாக தகவல்
  • புலி படத்தின் டீஸருக்கும் இதே நிலை ஏற்பட்டது
பாகுபலி திரைப்படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் இன்னும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட எதிர்பார்ப்பை தொடர்ந்து படம் வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் பல நூறு கோடியை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் டிரையிலர் நேற்று வெளியானது.

காலையில் திரையரங்குகளிலும் பின்பு மாலையில் யூடியூபில் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் கூறப்பட்டிருந்தது. ஆனால் எப்படியோ காலையிலேயே இணையத்தில் டிரையிலரை சிலர் லீக் செய்த்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த படக்குழு உடனடியாக அதிகாரப்பூர்வமாக டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இதேபோல்தான் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தின் டீஸருக்கும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்