விளம்பரம்
முகப்புகோலிவுட்

மகிழ்மதி ராஜ்ஜியத்துடன் எங்களுடைய ஐந்தாண்டு வாழ்க்கை – ஆடை வடிவமைப்பாளர் ரமா ராஜமெளலி

  | April 26, 2017 11:29 IST
Movies

துனுக்குகள்

  • அமர்சித்திர கதா, சந்தமாமா கதைகளில் இருந்து பாகுபலிக்கு குறிப்புகள் எடுத்துக்கொண்டோம்
  • மகிழ்மதி மற்றும் குந்தல ராஜ்ஜியத்தை உருவாக்கினோம்
  • 1000 க்கும் மேற்ப்பட்ட ஜூனியர் நடிகர்களுக்கு ஆடைகள் வடிவமைத்தோம்
பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க மக்களிடம் அப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்படத்தை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டவர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களுக்கு திரையில் உயிர்க்கொடுக்க மிகப்பிரம்மாண்டமான வேலைகளை செய்துள்ளனர். படப்பிட்ப்பு தள வடிவமைப்பு, VFX மற்றும் CG இவையனைத்தையும் தாண்டி படத்தில் கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பே எல்லோரையும் அதிகமாக கவர்ந்திளுத்தது. இப்படத்தின் இரண்டு பாகங்களுக்குமே இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மனைவி ராமா ராஜமெளலி மற்றும் பிரசாந்தி திருவேனி ஆகியோர் இணைந்து ஆடை வடிவமைப்பு மற்றும் நகைகள் தேர்ந்தெடுப்பு பணிகளை செய்தனர் என்பது நமக்கு தெரியவந்தது. இந்த இருவர்களிடம் நாம் உரையாடும்போது சிறிய விஷயங்களை கூட எவ்வளவு உன்னிப்பாக கவனித்தார்கள் என்பதும் இவ்வளவு மிகப்பிரம்மாண்டமான வேலையை எவ்வாறு செய்துமுடித்தார்கள் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்க உள்ளோம்.

கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற வடிவமைப்பை தயார் செய்வதற்கு முன்னதாக அக்கதாப்பாத்திரத்தின் வரலாற்றினை புரிந்துக்கொள்ளவேண்டும், இதைப்பற்றி ராமா ராஜமெளலி கூறும்போது “பாகுபலி திரைப்படம் ஒரு கற்பனை கலந்த திரைப்படம் என்பதால் அக்கதைக்கு ஏற்றவாறு வரலாறுகளில் தகுந்த இடங்கள் இல்லை, நமக்கு திட்டமிடுவதற்கு அக்காலத்தில் எந்த ஒரு வரலாற்று குறிப்புகளும் இல்லை, அதனால் ராஜாமெளலி ஒளிப்பதிவு, VFX மற்றும் CG துறைகள் உட்பட அனைத்தையும் இனைத்து ஒரு கலந்தாலோசனை கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார், நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து மகிழ்மதி மற்றும் தேவசேனையின் குந்தல ராஜ்ஜியம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தோம், அதேவேளையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கான வடிவமைப்பையும் முடிவு செய்ய ஆரம்பித்தோம், அந்த ராஜ்யத்தின் வானிலை எப்படி இருக்கும்? இயற்கையான முறையில் என்ன வசதிகள் அவர்களிடம் இருந்தது? எவ்வாறு வாழ்ந்தார்கள்? எவ்வாறு உடை அணிந்தார்கள்? எது போன்ற விவசாயம் செய்தார்கள்? எந்த வகை உணவை சாப்பிட்டார்கள் மற்றும் எது போன்ற தொழில்வல்லுநர்கள் இருந்தார்கள்?- இந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்டு, இந்த கேள்விக்கான பதில்கள் தான் இந்த இரண்டு ராஜ்ஜியங்களையும் உருவாக காரணமாக இருந்தது, ஒரு உதரணாமாக அவர்கள் எது போன்ற விவசாயம் செய்தார்கள் என்பதை மையப்படுத்தி தான் அந்த சூழலுக்கு ஏற்றவாரு அனைத்தையும் வடிமைக்க வேண்டியதிருந்தது ”.

இதற்கு அடுத்தப்படியாக ராமாவின் கற்பனை திறனை தூண்டும் விதமாக அமைந்தது இது தான் ”இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற ஆடை மற்றும் அணிகளன்களை அமர் சித்திர கதா மற்றும் சந்தமாமா ஆகிய கதைகளில் இருந்தது குறிப்புகள் எடுத்துக்கொண்டோம்”.
இப்படத்தில் உண்மையான கதை சூழ்நிலையை உருவாக்கிட பொதுமக்களுக்கு கையால் தரிக்கப்பட்ட காட்டன் துணிகளை கொண்ட ஆடைகளையும் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்பவர்களுக்கு பட்டு நையப்பட்ட துணிகளையும் கொடுக்கப்பட்டிருந்தது “அச்சிடப்பட்ட மற்றும் மில்களில் தயாரிக்கப்பட்ட துணிகளை நாம் முழுமையாக புறந்தள்ளினோம், 1000 பேல்கள் அளவு கொண்ட மங்கிய வெள்ளை நிற துணிகளை வாங்கினோம், ஏனென்றால் இந்த இரண்டு ராஜ்ஜியத்திற்கும் இருந்த பணியாளர்களுக்கு ஏற்றவாறு பின்பு நாங்கள் தைத்துக்கொள்வதற்காக, நாம் முன்னணி கதாப்பாத்திரத்திற்கு மட்டும் ஆடை வடிவமைக்கவில்லை 1000க்கும் மேற்ப்பட்ட ராணுவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஜூனியர் நடிகர்களுக்கு ஆடை வடிவமைத்தோம்”.
 
rama rajamouli prasanthi

இந்த பிரம்மாண்டமான வேலையைப்பற்றி அவர் கூறும்போது, “பல லட்சம் துணி மீட்டர் அளவு இந்த ஐந்தாண்டுகளில் இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, ஏனென்றால் அதிகமான ஆடைகள் போர்கள காட்சிகளை படமாக்கும் போது சேதமடைந்தது, அதனால் புதிதாக ஆடைகளை வடிவமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது, அதனால் இந்த ரக துணிகளை முன்கூட்டிய வாங்கி சேமித்து வைத்திருந்தோம்”. இந்த மிகப்பெரிய வேலைக்காக வருடக்கணக்கில் நரேன்பேட் மற்றும் மங்கல்கிரி என்கிற முழுக்கிராமமே துணி நைதல் வேலையை செய்தனர்.

பிரபாஸுக்கு மெல்லிய வண்ணமும் ராணாவுக்கு தங்க மின்னும் வண்ணமும் : -

இவர்கள் இருவரும் தங்களுக்குள்ளே வேலைகளை நுனுக்கமாக செய்திட பகிர்ந்துக்கொண்டுள்ளனர், பிரஷாந்தி கூறுகிறார் “நான் தேவசனையின் குந்தல ராஜ்ஜியத்திற்கான ஆடை வடிவமைப்பை கவனித்தேன், ராமா அவர்கள் மகிழ்மதி ராஜ்ஜியத்தை கவனித்தார்கள், மகிழ்மதி ராஜ்ஜியத்தில் தங்கம், இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தது, குந்தல மக்களுக்கு மெல்லிய வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதனை நீங்கள் பாகுபலி 2ல் பார்ப்பீர்கள், ஆடை நிறத்தேர்வும் அணிகளன்களும் தான் இந்த கதாப்பத்திரத்தை பிரதிபலித்துள்ளது, அதனால் பிரபாஸுக்கு மெல்லிய வண்ணம் கொண்ட ஆடையும், ராணாவிற்கு தங்க மின்னும் வண்ணம் கொண்ட ஆடையும் கொடுக்கப்பட்டிருந்தது”, கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பை வரைகலை நிபுனர்கள் எங்களிடம் கேட்டு வரைந்தது இவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது, “ஆனால் இவை அனைத்தையும் எங்களது தலைமை ஆடை வடிவமைப்பாளர் கே.கிருஷ்னா இல்லாமல் நடந்திருக்காது” என்பதை ராமா பெருமையுடன் கூறிகிறார்.

ஆடைகள் தவிர கலை இயக்கத்துறையுடன் இணைந்து அந்த ராஜ்ஜித்தையும், அரச குடும்பத்தையும் உருவாக்கிட போர் கவசங்கள், தலை கவசம் காலனிகள் மற்றும் அணிகளன்களை உருவாக்கினார்கள். இந்த இருவரும் இணைந்து ஒரு சிறிய பெருநிறுவனத்தை நடத்தியுள்ளனர், 200 பணியாளர்கள் ஆடைகளை இவர்கள் கொடுத்த வடிவமைப்பிற்கு ஏற்றவாறு வெட்டிய பின் 3 டெய்லர்கள் வெட்டிய துணியை தைத்துள்ளார்கள், பிரத்யோக லெதர் வடிவமைப்பாளர் பாதுகாப்பு கருவிகளை திரையில் பார்ப்பதற்கு மெட்டல் போன்று காட்சியளிக்கும் வண்ணம் உருவாக்கி இருந்தார். ராமா கூறுகிறார் “போர் கவசங்கள் கோணிதுணிகளை கொண்டு உருவாக்கி அதன் மேல் வண்ணம் பூசி நிஜமானவற்றை போன்று காட்சிப்படுத்தினர் ”.

இந்த கடினமான பணிகளில் நடுவே நடைப்பெற்ற இயற்கையான தடங்களை பற்றி கேட்டபோது “ஒரு முறை படப்பிடிப்பிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 200 ஷூக்கள் யாருக்கும் பொருந்தாத அளவில் வைத்திருந்தது நமக்கு தெரியவந்தது, நம்மிடம் புது ஷூ தாயார் செய்ய போதுமான லெதர்களும் இல்லை, நேரமும் இல்லை. ஆனால், எப்படியாவது அதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம், அந்த ஷூ வடிவமைப்பாளர் இரவு பகலாக வேலை செய்து படப்பிடிப்பு தேவையான அனைத்து ஷூக்காளின் அளவையும் மாற்றி தந்தார், இது போன்ற பல நிகழ்வுகள் கடந்த ஐந்தாண்டுகளில் நடைப்பெற்றுள்ளது, காலை 6 மணிக்கெல்லாம் துவங்கும் எங்களுடைய வேலை இரவு 9 மணிக்கு தான் முடியும், அதனால் நாங்கள் 5 ஆண்டுகளுக்கு மகிழ்மதி ராஜ்ஜியத்திலேயே வாழ்ந்தோம்.”

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்