விளம்பரம்
முகப்புகோலிவுட்

கட்டப்பாவிற்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கோரிய ராஜமெளலி

  | April 20, 2017 16:22 IST
Movies

துனுக்குகள்

  • மூன்று மொழிகளில் தயாரிகியுள்ளது பாகுபலி 2 திரைப்படம்
  • சுமார் 8500 திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
  • சத்யராஜ் காவேரி விஷயத்தில் பேசிய கருத்து சர்சைக்குள்ளாகியுள்ளது
உலகமே எதிர்நோக்கி இருக்கும் பாகுபலி 2 திரைப்படத்தின் வெளியீடு இம்மாதம் 28ம் தேதி என்று முடிவாகியுள்ளது. தமிழ், தெலுகு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்தும் வெளியிட உள்ளது தயாரிப்புக்குழு, கன்னட மொழியில் மொழிமாற்றி திரைப்படங்களை திரையிட தடையிருந்தாலும் ஒரு சில படங்களுக்கு பிரத்யோகமக அனுமதி வழங்கப்படுகிறது, உதாரணமாக ’தல’ அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற ’என்னை அறிந்தால்’ திரைப்படம் ’சத்யமூர்த்தி IPS’ என்ற பெயரில் கன்னட மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு கர்நாடக மாநிலத்திலும் வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது பாகுபலி 2 கன்னட மொழியில் வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகள் தொடங்கிய சூழ்நிலையில் கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகள் இப்படத்திற்கு தடை கோரியும், இத்திரைப்படம் வெளியாகும் தேதியான ஏப்ரல் 28 தேதி அன்று மாநில முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் கன்னட மொழியில் மாற்றம் செய்து இப்படம் வெளியாகுவது அல்ல, மாறாக காவேரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகவிற்கு எதிராகவும் கன்னட மக்களுக்கு எதிராகவும் நடிகர் சத்யராஜ் பேசிய சர்சைக்குறிய பேச்சு தான் என்கிறது கர்நாடக அமைப்புகள்.
 

இதனைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய எதிர்ப்புகுழு தலைவர் வாட்டல் நாகராஜ் “பாகுபலி திரைப்பட குழு மீது எங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் அல்ல, இது போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்கள் கன்னட மொழியில் வெளியாவதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் காவேரி நதிநீர் விஷயத்தில் கன்னடர்களை தவறாக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் அது நடைப்பெறவில்லை என்றால் இத்திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே இந்த செய்தி அறிந்த பாகுபலி திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார், அதில் “கன்னட மக்களை நாங்கள் பெரிதும் நேசிக்கிறோம், யார் தவறு செய்து இருந்தாலும் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” என கன்னடத்தில் பேசியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்