முகப்புகோலிவுட்

முதன்முறையாய் மேடம் துஸ்ஸாத்ஸில் இடம்பெறும் தமிழ் நடிகரின் மெழுகுச்சிலை

  | March 12, 2018 13:19 IST
Kattappa

துனுக்குகள்

  • இதன் இரண்டு பாகங்களும் மெகா ஹிட்டானது
  • இதில் சத்யராஜுக்கு ‘கட்டப்பா’ என்ற பவர்ஃபுல்லான கேரக்டர்
  • அருங்காட்சியகத்தில் ‘கட்டப்பா’ சத்யராஜின் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது
2015-ஆம் ஆண்டு ‘பாகுபலி’ முதல் பாகம் ரிலீஸானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் (2017) ஏப்ரல் 28-ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வந்த ‘பாகுபலி 2’-வில் ஹீரோவாக ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடித்திருந்தார். ரிபெல் ஸ்டாருக்கு எதிராக வில்லன் வேடத்தில் ராணா டகுபதி மிரட்டியிருந்தார். மேலும், மிக முக்கிய வேடங்களில் சத்யராஜ், நாசர், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.

விஷுவல் ட்ரீட்டான ‘பாகுபலி’யின் வெர்ஷன் 2.0, ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ என்ற கேள்விக்கான விடையாக மட்டுமின்றி, இப்படி ஒரு பிரம்மாண்டமான படைப்பை ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய சினிமாவுலகிற்கே மேஜிக்காக நிகழ்த்தி காட்டிய பெருமை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கே சேரும். எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த இதற்கு கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், சினிமா பிரபலங்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது. இதில் சத்யராஜுக்கு ‘கட்டப்பா’ என்ற பவர்ஃபுல்லான கேரக்டர். தற்போது, லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் ‘கட்டப்பா’ தோற்றத்தில் சத்யராஜின் மெழுகு சிலை வைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்போகும் முதல் தமிழ் நடிகரின் மெழுகு சிலை இவரோடையது தானாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்