விளம்பரம்
முகப்புகோலிவுட்

பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடா தயாராகும் பாகுபலி

  | August 09, 2017 16:27 IST
Movies

துனுக்குகள்

  • தமிழ்,தெலுகு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது
  • கதாநாயகியாக நடிகை அனுஷ்கா நடிக்கப் போவதாக முன்பு செய்தி வெளியானது
  • அதன் பின் தமன்னா நடிக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியாகின
பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய திரைப்படம் ‘சாஹோ’. இப்படம் தமிழ், தெலுகு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டும் வருகிறது.

இதன் கதாநாயகியாக நடிகை அனுஷ்கா நடிக்கப் போவதாக முன்பு செய்தி வெளியானது. பின்னர் அவருடைய கால்ஷீட் கிடைக்காததால் இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

அதன் பின் தமன்னா நடிக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால், இவர்கள் யாரும் நடிக்கவில்லை என்று பாலிவுட் உலகின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து நடிகை நடிகை கத்ரீனா கைஃப்,‌ நடிகை ஷ்ரத்தா கபூர், நடிகை திஷாபதானி, நடிகை பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நீல் நிதின் நடிப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்