விளம்பரம்
முகப்புகோலிவுட்

சுற்றுலா தலமான பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்

  | September 11, 2017 14:16 IST
Baahubali 2 Shooting Spot

துனுக்குகள்

  • ‘பாகுபலி 2’ பாக்ஸ் ஆஃபீஸில் கோடி கணக்கில் வசூல் மழை பொழிந்தது
  • ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டது
  • சுற்றுலா தலமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது
2015-ஆம் ஆண்டு ‘பாகுபலி’ முதல் பாகம் ரிலீஸானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் (2017) ஏப்ரல் 28-ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியானது. உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வந்த ‘பாகுபலி 2’-வில் ஹீரோவாக ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடித்திருந்தார். ரிபெல் ஸ்டாருக்கு எதிராக வில்லன் வேடத்தில் ரானா டகுபதி மிரட்டியிருந்தார். மேலும், மிக முக்கிய வேடங்களில் சத்யராஜ், நாசர், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.

விஷுவல் ட்ரீட்டான ‘பாகுபலி’யின் வெர்ஷன் 2.0, ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ என்ற கேளிவிக்கான விடையாக மட்டுமின்றி, இப்படி ஒரு பிரம்மாண்டமான படைப்பை ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய சினிமாவுலகிற்கே மேஜிக்காக நிகழ்த்தி காட்டிய பெருமை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கே சேரும். இந்த படம் ரசிகர்களிடையேவும், சினிமா பிரபலங்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது.

இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் உள்ள ‘ராமோஜி ஃபிலிம் சிட்டி’-யில் பிரம்மாண்ட செட் போடப்பட்டது. அங்குதான் மகிழ்மதி மற்றும் குந்தலதேச அரண்மனைகள் உருவாக்கப்பட்டன. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தும் அகற்றப்படாமல் பாதுகாத்து வந்த இந்த செட்டை தற்போது, சுற்றுலா தலமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாம். ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம் சுற்றுலா தலமாக மாறியிருப்பது தென்னிந்தியாவில் இது தான் முதன் முறையாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்