முகப்புகோலிவுட்

பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள ‘யார்? இவர்கள்’ டீசர்

  | June 07, 2018 18:57 IST
Yaar Ivargal

துனுக்குகள்

  • ‘ரா...ரா...ராஜசேகர்’ பல மாதங்களாக ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்
  • பாலாஜி சக்திவேல் இயக்கி வரும் புதிய படம் ‘யார்? இவர்கள்’
  • மிஸ்ட்ரி ஜானரில் தயாராகும் இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்கின்
கோலிவுட்டில் எப்பவுமே உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதையமைத்து, சமூகத்தில் விழிப்புணர்வை உண்டாக்கும் எண்ணத்தில் சிறந்த படங்களை இயக்கி வருபவர் பாலாஜி சக்திவேல். ‘காதல், கல்லூரி, வழக்கு எண் : 18/9’ ஆகிய படங்களுக்கு பிறகு இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரா...ரா...ராஜசேகர்’. இப்படம் பல மாதங்களாக ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

தற்போது, பாலாஜி சக்திவேல் இயக்கி வரும் புதிய படம் ‘யார்? இவர்கள்’. இதனை விஜய் மில்டன் தனது ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரிப்பதோடு, படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் தயாராகும் இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்கின்றனர்.
 

இதற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்து வருகிறார். இன்று படத்தின் ஃ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்போஸ்டர் & டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்