முகப்புகோலிவுட்

ஜெய் கொடுத்த டார்ச்சரால் ‘பலூன்’ இயக்குநர் தற்கொலை முயற்சியா?

  | January 05, 2018 11:09 IST
Director Sinish

துனுக்குகள்

  • ஜெய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘பலூன்’
  • நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்
  • தினமும் குடித்துவிட்டு தான் ஜெய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வருவார்
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்திற்கு பிறகு ஜெய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘பலூன்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியிருந்தார். இதில் ஜெய்-க்கு ஜோடியாக ஜனனி அய்யர், அஞ்சலி என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். ’70 MM எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது, ’70 MM’ நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் ஜெய் மீது ‘பலூன்’ திரைப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக குற்றச்சாட்டு வைத்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது “எங்களது ‘பலூன்’ படத்தை 2017 ஜனவரி மாதமே வெளியிட திட்டமிட்டோம். ஆனால், அது முடியாமல் டிசம்பரில் வெளியாக முக்கியமான காரணம் நடிகர் ஜெய். ஜெய் படத்திற்காக தேதிகளை சரிவர கொடுக்காமலும், படப்பிடிப்பிற்கு வராமலும், சரியாக எங்களுக்கு ஒத்துழைக்காமலும் இருந்ததால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

டப்பிங்-க்கு கூட அவர் வராமல் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார். ஜெய் கொடுத்த டார்ச்சரால் எங்கள் டைரக்டர் சினிஷ் கொடைக்கானலில் தற்கொலை முயற்சி செய்ய தூண்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டார். படப்பிடிப்பின் போது, தினமும் குடித்துவிட்டு தான் ஜெய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வருவார். 8 மணி நேரம் ஷூட்டிங் செய்ய திட்டமிட்டால், இவரை வைத்து 4 மணி நேரம் ஷூட்டிங் செய்வதே பெரிய போராட்டமாய் சென்று முடியும். மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி அவர் ஏற்படுத்திய பொருட்செலவினால், எங்களால் சொன்ன தேதியை தாண்டியே ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நடத்த முடிந்தது. இறுதியாக நாங்கள் வாங்கிய கடன், அதற்கான வட்டி, என மொத்தமாக ரூ.1.50 கோடி அதிகமாகவே இவரால் செலவானது.


எனக்கு ஏற்பட்ட அனைத்து நஷ்டமும் நடிகர் ஜெய் அவர்களாலேயே ஏற்பட்டது. அவரால் ஏற்பட்ட இந்த பண நஷ்டம் ரூ.1.50 கோடியை, நடிகர் ஜெய் உடனடியாக எங்களுக்கு செட்டில் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம். புரொடியூசர் கவுன்சில் இதில் எங்களுக்காக குரல் கொடுத்து உதவுமென முழு நம்பிக்கையுடன், தங்களது உதவியை நாடுகிறோம். இந்த பிரச்சனைக்கு தீர்வுகண்ட பின்னரே, நடிகர் ஜெய் மற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது எங்களைப்போல் தற்போது அவரை வைத்து படம் தயாரித்து கொண்டிருக்கும் அனைத்து சக தயாரிப்பாளர்கள் நன்மையையும் கருதி வைக்கும் வேண்டுகோள்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்