முகப்புகோலிவுட்

'வர்மா'வில் துருவ்விற்கு ஜோடி இவர்தான் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  | July 04, 2018 13:04 IST
Varma Movie Cast

துனுக்குகள்

  • விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம்
  • தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான இப்படம் மெகா ஹிட்டானது
  • 'வர்மா' என டைட்டிலிட்டுள்ள இதனை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார்
டோலிவுட்டில் ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் தேவரகொண்டா ரோலில் விக்ரமின் மகன் துருவ் நடிக்கிறார்.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம். ‘வர்மா’ என டைட்டிலிட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். மேலும், முக்கிய வேடத்தில் ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘பிக் பாஸ்’ புகழ் ரைசா வில்சன் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனை ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

ரதன் இசையமைக்கும் இதற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் துருவ்விற்கு ஜோடியாக, பெங்கால் நடிகை மேகா என்பவர் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்