விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘மிக மிக அவசரம்’ படத்தில் இணைந்த இயக்குநர் இமயம்

  | April 21, 2017 18:37 IST
Movies

துனுக்குகள்

  • தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக களமிறங்கும் படம் ‘மிக மிக அவசரம்’
  • ஸ்ரீ பிரியங்கா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்
  • ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலானது
‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் கதையின் நாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா போலீஸாக வலம் வரவுள்ளாராம். மேலும், இயக்குநர் சீமான், ஹரீஷ், ஈ.ராமதாஸ், முத்துராமன், சக்தி சரவணன், வெற்றிக் குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘புதிய கீதை’ புகழ் இயக்குநர் ஜெகன்நாத் கதை – வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு திரைக்கதை எழுதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து, இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. இஷான் தேவ் இசையமைத்து வரும் இதற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டினார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வருகிற ஏப்ரல் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்