முகப்புகோலிவுட்

பரத் போலீஸாக நடிக்கும் ‘காளிதாஸ்’ டீசர்

  | July 06, 2018 18:16 IST
Kalidas Movie

துனுக்குகள்

  • இதில் பரத் போலீஸ் அதிகாரியாக வலம் வரவுள்ளார்
  • இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • முக்கிய வேடங்களில் சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளனர்
பரத் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘காளிதாஸ்’. ஸ்ரீசெந்தில் என்பவர் இயக்கி வரும் இதில் பரத் போலீஸ் அதிகாரியாக வலம் வரவுள்ளார். ஹீரோயினாக மலையாள நடிகை அன் ஷீத்தல் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய வேடங்களில் ‘TSK’ புகழ் சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இதற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார், புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை தினகரன் – சிவநேசன் இணைந்து தயாரித்து வருகின்றனர். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டீசரை நடிகர் ‘ஜெயம்’ ரவி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்