முகப்புகோலிவுட்

'பிக் பாஸ்' சீசன் 2 துவங்கும் தேதி அறிவிப்பு

  | June 04, 2018 17:29 IST
Big Boss 2

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்
  • சீசன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார்
  • சீசன் 2-வையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார்
உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு (2017) ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்த ‘பிக் பாஸ்’ ஷோ சீசன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 2-வுக்கான டீசர் வெளியிடப்பட்டது.

சீசன் 2-வையும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். தற்போது, வருகிற ஜூன் 17-ஆம் தேதி முதல் சீசன் 2 துவங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இதில் கலந்து கொள்ளப்போகும் 15 போட்டியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்