முகப்புகோலிவுட்

புதிய ஜெயில் அறையுடன் 'பிக் பாஸ் - சீசன் 2'வின் அசத்தலான செட்! EXCLUSIVE புகைப்படங்கள்!!

  | June 14, 2018 18:44 IST
Bigg Boss 2 Tamil

துனுக்குகள்

  • புதிய கண்கவர் செட் பத்திரிக்கையாளர்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது
  • பழைய செட்டை விட ரொம்பவே வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த செட்
  • ஒரு ஜெயில் அறையும் கூடுதலாக சேர்க்கக்கப்பட்டுள்ளது
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே, மிக அதிகமான பார்வையாளர்களை கொண்டிருக்கும் ஷோக்களில் ஒன்று 'பிக் பாஸ்'. சென்ற ஆண்டு தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, உட்சபட்ச TRP ரேட்டிங்கை அடைந்தது எல்லோரையுமே வியப்பில் ஆழ்த்தியது. வயது வித்தியாசமின்றி வீட்டிலுள்ள எல்லோரையும் இரவு 9 மணி ஆனதுமே தொலைக்காட்சி முன்னால் உட்கார வைக்க முடிந்தது இந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியால். நிகழ்ச்சி வெறும் 1 மணி நேரம் மட்டுமே ஓடினாலும் கூட, பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களது பிரச்சினையை ஏதோ தங்கள் பிரச்சினையைப் போல் 24 மணி நேரமும் பேசினார்கள் மக்கள். 'ஓவியா ஆர்மி', 'ஆரவ் ஆர்மி', 'வையாபுரி ஆர்மி', 'சினேகன் ஆர்மி', 'பிந்து மாதவி ஆர்மி', 'HaRaiza ஆர்மி' என்றெல்லாம் பல பல ஆர்மிக்களும் சமூக வலைதளங்களில் பிரபலமானது. மறுபுறம், தினம் தினம் மீம்ஸ் மழையாக கொட்டிக் கொண்டிருந்தது

இந்நிகழ்ச்சியின் 'சீசன் 2' வரும் ஜூன் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கவுள்ள நிலையில், 'சீசன் 2'வில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸாக நடிகை சினேகா, ரம்பா, யாஷிகா ஆனந்த், RJ ரியோ உள்ளிட்ட பலரது பெயர் அடிபட்டு வருகின்ற நிலையில் எல்லாமே சஸ்பென்ஸாகவே தொடர்கிறது.
 
bigg boss 2
bigg boss 2
bigg boss 2
bigg boss 2
bigg boss 2
bigg boss 2
 
bigg boss 2
bigg boss 2
 
bigg boss 2
bigg boss 2
 
bigg boss 2
 
bigg boss 2
 
bigg boss 2
 
bigg boss 2
 
bigg boss 2
 
bigg boss 2
bigg boss 2
 
bigg boss 2
 
இந்நிலையில் 'பிக் பாஸ்' வீட்டின் புதிய கண்கவர் செட் பத்திரிக்கையாளர்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. வண்ணம், வடிவம், பிரம்மாண்டம் என எல்லா வகையிலும் பழைய செட்டை விட ரொம்பவே வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த செட்.

ஹால், லிவிங் ரூம், கிட்சன், பாத்ரூம், நீச்சல் குளம், ஸ்மோக்கிங் ரூம், கன்ஃபெஷன் ரூம் என எல்லா அறைகளுமே புத்தம் புதிய வடிவத்தில் இருந்தது. இது போக, புதிதாக 'பிக் பாஸ் லாக்கப்' என ஒரு ஜெயில் அறையும் கூடுதலாக சேர்க்கக்கப்பட்டுள்ளது.
இதோ புதிய 'பிக் பாஸ்' செட்டின் எஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் உங்களுக்காக...!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்