முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ கமல் காம்போ – காயத்ரி ரகுராம் டிவிட்

  | November 09, 2017 12:56 IST
Gayathri Bigg Boss

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்
  • சீஸன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார்
  • இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது
உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. சமீபத்தில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த ‘பிக் பாஸ்’ ஷோ சீஸன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார்.

‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. நடிகர்கள் ஆரவ், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ஓவியா, ரைசா வில்சன் ஆகியோரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்த வண்ணமுள்ளது. ஜூலி பிரபல சேனலில் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.
 
இந்நிலையில், காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ஹோட்டலின் மெனுவை ஷேரிட்டுள்ளார். அதில் “பிக் பாஸ் கமல் காம்போ – காயத்ரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா, ரைசா ரைஸ், சக்தி எக் மசாலா, சிநேகன் 65, ஜூலி ஜூஸ் – இவை அனைத்தும் ரூ.200 மட்டுமே” என ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களின் பெயரை குறிப்பிட்டு மெனு போடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்