முகப்புகோலிவுட்

ப்ரித்விராஜ் படத்தில் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்

  | November 13, 2017 12:26 IST
Ganesh Venkatram

துனுக்குகள்

  • ‘அபியும் நானும்’ படத்தில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம்
  • ‘பிக் பாஸ்’ ஷோவில் கணேஷ் வெங்கட்ராமும் ஒரு போட்டியாளர்
  • இப்படத்தில் ஹீரோவாக ப்ரித்விராஜ் நடிக்கிறார்
த்ரிஷாவின் ‘அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். இதனையடுத்து ‘உன்னைப்போல் ஒருவன், தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராமும் ஒரு போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு கணேஷ் வெங்கட்ராமுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. தற்போது, ‘மை ஸ்டோரி’ (MY STORY) எனும் மலையாள படத்தில் நடிக்க கணேஷ் வெங்கட்ராம் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமுக்கு பவர்ஃபுல்லான கதாபாத்திரமாம்.
 
ரோஷினி தினகர் இயக்கி வரும் இதில் பார்வதி ஹீரோயினாக நடிக்கிறார். ஷான் ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் போர்ச்சுகலில் துவங்கவிருக்கிறது. இந்த செடியூலில் கணேஷ் வெங்கட்ராமும் கலந்து கொள்ளவுள்ளாராம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்