முகப்புகோலிவுட்

சிம்பிளாக திருமணத்தை முடித்த `பிக் பாஸ்' டேனியல்!

  | September 03, 2018 16:01 IST
Bigg Boss

துனுக்குகள்

  • காமெடியனாக பல படங்களில் நடித்தவர் டேனியல்
  • இவர் பிக் பாஸ் 2வில் கலந்து கொண்டார்
  • தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்
`பொல்லாதவன்', `பையா', `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', `மரகத நாணயம்', `ரங்கூன்', `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனப் பல படங்களில் தனது காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்தவர் டேனியல் ஆனி போப். `பிக் பாஸ் சீசன் 2' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் பெரிய அளவில் கவனம் பெற்றார்.

இந்த வார எலிமினேஷனில் டேனியல் வெளியேறினார். இதனையடுத்து டேனியல் மற்றும் அவரது காதலி தெனிஷா இருவரின் திருமணப் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருந்தது. தற்போது இது பற்றி டேனியலே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

"எனது மனைவி தெனிஷா டேனியலை உங்களிடம் அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுக்கு எளிமையாகப் பதிவுத் திருமணம் நடைபெற்றது. சில குடும்ப பிரச்சனைகள் காரணமாக இந்த திருமண செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கணவன் மனைவியாக நாங்கள் துவங்கும் இந்தப் பயணத்தில் உங்கள் ஆசிர்வாதமும் வாழ்த்துகளும் அவசியம் தேவை" என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் டேனியல்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்