முகப்புகோலிவுட்

போதையில் கார் ஓட்டி விபத்து… போலீஸ் பிடியில் பிரபல இயக்குனரின் மகன்

  | January 09, 2019 14:12 IST
Shakthi Vasudevan

துனுக்குகள்

  • பிக்பாஸ் போட்டியாளராக வந்தவர் இவர்
  • இயக்குனர் வாசுதேவனின் மகன் இவர்
  • நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்திருந்தார்
நடிகர் பிரபு நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் சின்ன தம்பி. இந்த படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்தவர் சக்தி வாசுதேவன்.

இவர் தமிழ் திரையுலகின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான பி.வாசுவின் மகன் ஆவார்.

பல ஆண்டுகள் கழித்து தொட்டால் பூ மலரும், திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இவர் நடித்த எந்த படங்களும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்பதால் பல ஆண்டுகளாக இவரது எந்த படமும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் போட்டியில் கலந்துக்கொண்டார். இதில் காயத்திரியின் நண்பராக இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழந்து விமர்சனத்திற்குள்ளானார்.

இந்த நிலையில் நடிகர் சக்தி நேற்று மதியம் சூளைமேடு இளங்கோவடிகள் நகரில் சென்றுக்கொண்டிருந்த போது எதிரே நின்றுக்கொண்டிருந்த ஈகோஸ்போர்ட்ஸ் காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் நடிகர் சக்தியை விசாரணைக்காக அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த விபத்தால் யாருக்கும் எந்தவிதமான காயமோ, இழப்போ ஏற்படவில்லை என்றாலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வேகமாக சென்ற காரை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது அவர் நடிகர் ஷக்தி என தெரியவந்துள்ளது. மேலும், அவர் குடிபோதையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அண்ணா நகர் போக்குவரத்து காவலர்களுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் நடிகர் சக்தியை விசாரணைக்காக அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த விபத்தால் யாருக்கும் எந்தவிதமான காயமோ, இழப்போ ஏற்படவில்லை என்றாலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்