விளம்பரம்
முகப்புகோலிவுட்

தற்கொலை விவகாரம் நடிகை ஓவியாவிற்கு காவல் துறை சம்மன்

  | August 12, 2017 17:24 IST
Celebrities

துனுக்குகள்

  • ஓவியா தற்கொலைக்கு முயற்சி செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது
  • வழக்கறிஞர் எஸ்.எஸ். பாலாஜி புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்
  • நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்
தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்ற வழக்கில் காவல் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியாவுக்கு தற்கொலைக்கு முயற்சி செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.எஸ். பாலாஜி புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்.

இந்நிலையில் நசரத்பேட்டை காவல்துறை ஆய்வாளர் நடிகை ஓவியா தற்கொலை விவகாரத்தில் நடந்த உண்மை என்ன என்பதை விளக்க, காவல் நிலையத்தில் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் நடிகை ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்