முகப்புகோலிவுட்

இந்த வார ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான டிட் பிட்ஸ்

  | July 22, 2017 16:54 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

 • உலகெங்கும் ஹிட்டான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’
 • தமிழில் இந்த ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்
 • தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்குகிறார்
சமீபமாக சமூக வலைதளங்களில் பயங்கரமாக டிரெண்டாகி வந்த வார்த்தை ‘பிக் பாஸ்’. உலகெங்கும் ஹிட்டான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர் என பன்முகம் கொண்ட ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்போட்டியில் ஸ்ரீ, அனுயா, வையாபுரி, காயத்ரி ரகுராம், பரணி, ரைசா வில்சன், சிநேகன், ஓவியா, ஆர்த்தி கணேஷ், ஆரவ், கஞ்சா கருப்பு, ஜூலியனா, கணேஷ் வெங்கட்ராம், சக்தி வாசு, நமீதா ஆகிய 15 பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் டாக்டரின் அட்வைஸ்படி வெளியேற்றப்பட்டார். முதல் வாரத்தில் அனுயாவும், இரண்டாம் வாரத்தில் கஞ்சா கருப்பும் எலிமினேட்டாகியுள்ளனர். ‘பிக் பாஸ்’ வீட்டின் விதிமுறையை மீறியதால் பரணி வெளியேற்றப்பட்டார்.
 
‘பிக் பாஸ்’ ஷோவில் நான்காம் வாரத்தில் தாம் தூம் என்று நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து நெட்டிசன்கள் கூறும் டிட் பிட்ஸ் இதோ...
 
 • மூன்றாம் வாரத்தில் நடிகை ஆர்த்தி கணேஷ் எலிமினேட்டாகியுள்ளார்.
 • ஆர்த்தி வெளியேறியவுடன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘பிக் பாஸ்’ வீட்டில் இருக்கும்போது என்னை கலாயித்து வெளியான மீம்ஸ் எல்லாம் ஃபென்டாஸ்டிக் என்று ஸ்டேட்டஸ் தட்டினார்.
 • இரண்டாம் வாரத்தில் தலைவராக ‘பிக் பாஸ்’ வீட்டை ராஜ்ஜியம் செய்து வந்த கணேஷ் வெங்கட்ராம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
 • ‘பிக் பாஸ்’ வீட்டை ராஜ்ஜியம் செய்வதற்கு புதிய தலைவராக சக்தி வாசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • ஜூலி மாதிரி முழு போலி, ஓவியா போல முழு ஆக்டிங் பண்றவங்கள தான் மக்களுக்கு பிடிக்குது. சோ, நாமெல்லாம் இந்த ஷோவில் வின்னராக முடியாது என ரைசாவிடம் புலம்பினார் நமீதா.
 • ஜூலி வயிற்று வலியில் துடிக்கும் நிலையில் நடிப்பு என காயத்ரி கூற, அதற்கு வெளியே இருக்கும் ஆர்த்தியும் ட்விட்டரில் “இது உலக மகா நடிப்பு” என்று பதிவிட்டுள்ளார்.
 • வீட்டில் உள்ள அனைவரும் கோரஸாக ‘பிக் பாஸ்’ ஓவியாவை உடனடியாக வெளியேற்றுங்கள் என்று கூறியுள்ளனர்.
 • ஓவியா வெளியேற்றப்பட்டால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையே பார்க்க மாட்டோம் என நெட்டிசன்ஸ் கொந்தளித்து #NOOVIYANOBIGBOSS என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கினார்கள்.
 • தனது பொறுமையை ஜூலி மிகவும் சோதித்ததால், அவரை ‘போடி’ என்று செம கடுப்பில் கூறினார் ஓவியா
 • சக்தி ஓவியாவிடம் இப்படியே பேசிட்டிருந்த ஓங்கி அரஞ்சிடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஓவியா செம கெத்தாக ‘எங்க அரைங்க பாக்கலாம்’ என்று கூறியதை ‘தளபதி’ படத்தில் ரஜினி கூறும் ‘எங்க தொடுறா பாக்கலாம்’ வசனத்திற்கு இணையாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் வைரலாகி வருகிறது
 • இந்த வார எலிமினேஷனுக்கு ஓவியா, நமீதா, கணேஷ் வெங்கட்ராம் ஆகிய மூன்று பேரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு வாரங்களுக்கே அடுக்கடுக்கா ஷாக் மோடுக்கு நம்மை ஆக்டிவேட் செய்ய வைக்கும் இந்த ‘பிக் பாஸ்’ வீட்டில் மொத்தம் 100 நாட்கள் இருக்க வேண்டும். இன்னும் நெட்டிசன்களுக்கு தீனி போடும் வகையில் பல சம்பவங்கள் காத்துக் கொண்டிருக்கிறது பாஸு.. ‘பிக்’ பாஸு.. 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்