விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு ஓவியா வெளியேற்றம் குறித்து சினிமா நட்சத்திரங்களின் டிவிட்ஸ்

  | August 05, 2017 16:17 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்
  • நடிகை ஓவியாவிற்கு இளைஞர்கள் சப்போர்ட் அதிகம் உள்ளது
  • ஓவியா மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்
சமீபமாக சமூக வலைதளங்களில் பயங்கரமாக டிரெண்டாகி வந்த வார்த்தை ‘பிக் பாஸ்’. உலகெங்கும் ஹிட்டான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர் என பன்முகம் கொண்ட ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ஷோவில் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களில் ஒருவரான ஓவியாவிற்கு இளைஞர்கள் சப்போர்ட் அதிகம் இருப்பதால், கடந்த சில வாரங்களாகவே எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியும் ரசிகர்களின் ஆதரவால் தாக்கு பிடித்து வந்தார்.

இந்நிலையில், ஆரவ்வின் காதல் விஷயத்தில் ஓவியா மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யவும் முயன்றுள்ளார். ஆகையால், ஓவியா வெளியேறிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இன்னொரு புறம் இது குறித்து சில சினிமா நட்சத்திரங்கள் டிவிட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளனர்.
 
நடிகை சூஸா குமார் – ஓவியா வெளியேறி விட்டதாக பரவும் வதந்திகள் உண்மையாக இருந்தால்.. லாஸ் ஓவியாவுக்கு இல்லை.. பிக் பாஸுக்கும், விஜய் டிவி-க்கும் தான் லாஸ்..
 
நடிகை ஸ்ரீப்ரியா – ஓவியா வெளியேறுவது நல்லது தான்... அப்போது தான் அவருக்கு மக்களிடம் கிடைக்கும் ஆதரவை தெரிந்து கொண்டு மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்.
 
நடிகை ஆர்த்தி – கோடிக்கணக்கான மக்கள் உன்மீது வைத்த அன்பு வீண்போகாது ஓவியா டார்லிங்... எப்பவுமே நான் உனக்கு ஆதரவாக இருப்பேன்..
 
நடன இயக்குநர் சதீஷ் – ஓவியா இல்லையென்றால் பிக் பாஸ் இல்லை. ஓவியா எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தாலும், அவர் தனிமையில் இருப்பதை போல் உணர்ந்தார். ஆகையால் அவரை பொறுத்தவரை வெளியேறுவது நல்ல முடிவு தான்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்