முகப்புகோலிவுட்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாபி சிம்ஹா

  | June 18, 2018 11:33 IST
Rajinikanth Next Film

துனுக்குகள்

  • ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்
  • டார்ஜிலிங்கில் நடக்கிறது இப்பட ஷூட்டிங்
  • இதில் பாபி சிம்ஹாவும் நடிக்கிறார்
`காலா' படத்துக்குப் பிறகு ரஜினி கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங், மிகவும் வேகமாக நடந்து வருகிறது. டார்ஜிலிங், டெஹ்ராடூன் மற்றும் கொல்காத்தாவில் தற்பொழுது படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழு, படத்தில் வரும் சில முக்கிய காட்சிகளை படமாக்க மிக விரைவில் இமயமலையின் சில பகுதிகளுக்கும் பயணிக்கவிருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முதல் நடிகர் பாபி சிம்ஹாவும் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் 3 படங்களில் நடித்தவர் என்பதும், ‘ஜிகர்தண்டா’ படத்தில் தன் நடிப்பிற்காக தேசிய விருதினை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்