முகப்புகோலிவுட்

வெப் சீரிஸில் நடித்துள்ள பாபி சிம்ஹா - ‘வெள்ளராஜா’ டிரெய்லர்

  | December 03, 2018 15:10 IST
Vella Raja Trailer

துனுக்குகள்

  • ‘வெள்ளராஜா’ வெப் சீரிஸில் ஹீரோவாக பாபி சிம்ஹா நடித்துள்ளார்
  • இதில் முக்கிய வேடங்களில் பார்வதி நாயர், காயத்ரி நடித்துள்ளனர்
  • இந்த வெப் சீரிஸ் ‘அமேசான் ப்ரைம்’-யில் டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீஸாகுமாம்
2016-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சவாரி'. தற்போது, குகன் சென்னியப்பன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார். ‘வெள்ளராஜா' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் ஹீரோவாக பாபி சிம்ஹா நடித்துள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் பார்வதி நாயர், காயத்ரி, காளி வெங்கட் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இதற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர்' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் ‘அமேசான் ப்ரைம்' என்ற இணையதளத்தில் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீஸாகுமாம்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்