விளம்பரம்
முகப்புகோலிவுட்

10 ஆண்டுகளாக ரசிகர்களின் பாச மழையில் சீனுராமசாமி

  | April 21, 2017 13:38 IST
Director Seenu Ramasamy Films

துனுக்குகள்

  • 2007-ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்குநராக அறிமுகமானார்
  • இவரது படங்கள் மனிதர்களின் எதார்த்த வாழ்வியலை பொதுவாக பிரதிபலிக்கும்
  • சீனுராமசாமி - விஜய் சேதுபதி 3-வது முறையாக கைகோர்க்கவுள்ள படம் ‘மாமனிதன்’
பரத் இரண்டு வேடங்களில் நடித்த ‘கூடல் நகர்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த படம் என மூன்று தேசிய விருதுகள் குவித்தது.

சமீபத்தில், ‘தர்மதுரை’ படத்தில் இடம்பெற்ற ‘எந்த பக்கம்’ பாடலை எழுதியதற்காக வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மனிதர்களின் எதார்த்த வாழ்வியலை பொதுவாக பிரதிபலிக்கும் சீனு ராமசாமியின் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

2007-ஆம் ஆண்டு ‘கூடல் நகர்’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய சீனு ராமசாமி தற்போது, 10 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்து விட்டார். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி – விஷ்ணு நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளது. இந்நிலையில், சீனுராமசாமி விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கவுள்ள ‘மாமனிதன்’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்