விளம்பரம்
முகப்புகோலிவுட்

'தல' அஜித்தின் 25 ஆண்டுகால திரையுலக பயணத்தின் சிறிய ஃபிளாஷ்பேக்

  | June 17, 2017 15:06 IST
Celebrities

துனுக்குகள்

  • பவித்ரா திரைப்படம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொது விபத்தில் சிக்கினார்
  • பவித்ரா திரைப்படத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரே நடித்தார்
  • 1997 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த 4 திரைப்படங்களும் வெற்றிபெறவில்லை
தல அஜித் இந்த பெயரைக்கேட்டாலே இன்று விசில் சத்தம் கதை கிழிக்கிறது, அவர் திரையில் தோன்றினால் மட்டும் போதும் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அப்படி பட்ட அவரை பற்றி பல நல்ல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கை நாயகன் என்ற பட்டம் சாதாரணமாக வரவில்லை அவரின் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் நமக்கு ஆச்சர்யமளிக்கும் வகையில் இருக்கும்.

அது போன்ற ஒரு நடந்த வரலாறை தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம் 1994 ஆம் வருடம் இவர் நடிப்பில் வெளியான 'பவித்ரா' திரைப்படத்தின் கதைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம், அதே வேலையில் தான் நிஜமாக கார் விபத்து ஒன்றில் அவர் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே நடித்தார்.
bavithara
திரைப்படமும் மிக இயல்பாக உருவாக்கியது அதன் பின் 1997 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த 4 படங்களுமே சரியாக போகவில்லை அவருக்கு படங்கள் வாய்ப்பு குறைந்தது நெருக்கமான நண்பர்கள் அவரை தொலைக்காட்சி தொடரில் நடிக்க அழைத்தார்கள் அதற்க்கு அஜித்தோ அதில் நடிப்பது ஒன்றும் தவறு அல்ல.
 
ajith 25 years of cinema

சினிமா என்னுடைய கனவு சினிமா என்னுடைய லட்சியம், நிச்சயம் சினிமாவில் ஜெயிப்பேன் என்று கூறினாராம், அதன் பின் இயக்குனர் சரணை நடிகர் விவேக் 'தல'யை அறிமுகம் செய்து கதை கேட்க சொல்ல, கதை நன்றாக இருக்கவே உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம், அந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது, அதுதான் 'காதல் மன்னன்' , தல அஜித்தை ஒரு லவ்வர் பாய்யாக மாற்றிய திரைப்படம் இது தான் என்றே கூறலாம் இன்னும் அதிகமான தகவல் தொடர்ந்து வெளிவரும்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்