முகப்புகோலிவுட்

சிம்புவின் பாட்டியா காஜல்!

  | January 16, 2019 10:57 IST
Indian 2 Cast

துனுக்குகள்

  • 1996ல் 'இந்தியன்' படம் வெளியானது
  • 'இந்தியின் 2' திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்குகிறார்
  • காஜல் அகர்வால் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்
1996 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான படம் ‘இந்தியன்'. இத்திரைப்படத்தில் லஞ்சம் வாங்குபவர்களை பழிவாங்கும் ஒரு தேசியவாதியாக கமல் நடித்திருப்பார்.
 
இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இத்திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்கிறார் இயக்குநர் சங்கர். இந்தியன் தாத்தாவாக மீண்டும் கமல் நடிக்கிறார். தற்போது அவர் அரசியல் கட்சி தொடங்கி தீவிரமாக ஈடுபட்டு வருவதால் சமகால அரசியலை பேசுகின்ற படமாக இருக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்த படத்தில் சிம்பு, காஜல், தென்கொரியா நடிகை சுஜி பே இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
 
கமலுக்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக தென்கொரியா நடிகை சுஜி பே நடிகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் நடிப்பதால் பேரனாக சிம்பு நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
 
அப்படியானால் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் சிம்புவுக்கு பாட்டியாக நடிக்க போகிறாரா என்று வியக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில் வெளியான எந்த படமும் காஜலுக்கு கை கொடுக்கவில்லை ‘இந்தியன் 2' நல்ல திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்