முகப்புகோலிவுட்

"பார்ட் 2 ரிலீஸுக்கு முன் பார்ட் 3 ஒன் லைன் ரெடி!" - இயக்குநர் சக்தி சிதம்பரம்

  | March 01, 2018 13:06 IST
Charlie Chaplin 2

துனுக்குகள்

  • ‘சார்லி சாப்ளின்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதிலும் பிரபு தேவா, பிரபு இணைந்து நடித்துள்ளனர்
  • தற்போது, ‘சார்லி சாப்ளின்’ பார்ட் 3 குறித்து ஷக்தி சிதம்பரம் பேசியுள்ளார்
2002-ஆம் ஆண்டு பிரபு தேவா, பிரபு நடிப்பில் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’. ஷக்தி சிதம்பரம் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் ஷக்தி சிதம்பரம் – பிரபு தேவா – பிரபு மூவரும் கைகோர்த்துள்ளனர். இதில் நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய வேடங்களில் ‘மகதீரா’ புகழ் தேவ்கில், சமீர் கோச், ரவி மரியா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கின்றனர். இதனை ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அம்ரிஷ் இசையமைக்கும் இதற்கு சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

படத்தை இந்தாண்டு (2018) மே மாதம் ரிலீஸ் செய்யவுள்ளனர். இந்நிலையில், ‘சார்லி சாப்ளின்’ பார்ட் 3 குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி பேசிய இயக்குநர் ஷக்தி சிதம்பரம் “சார்லி சாப்ளின் 3-க்கான ஒன்-லைன் தயாரா இருக்கு. அதிலும் பிரபு தேவா, பிரபு இணைந்து நடிக்கவுள்ளனர். அதுமட்டுமின்றி, இன்னொரு பிரபல நடிகரையும் பார்ட் 3-யில் நடிக்க வைக்கலாம்னு திட்டமிட்டுள்ளேன்” என்று ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்