முகப்புகோலிவுட்

வைரலாகும் தீபிகா படுகோனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  | March 25, 2019 13:41 IST
Chhapaak First Look

துனுக்குகள்

  • தீபிகா படுகேன் இப்படத்தில் நடித்திருக்கிறார்
  • லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவர்
  • அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி ’சபாக் ’திரைப்படம் வெளியாகும்
நடிகை தீபிகா படுகோன் கதாபாத்திரங்களுக்கு முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன் அடிப்படையில் மிகவும் சவாலான கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கும் படம்தான் 'சபாக்.
தற்போது இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வைரலாகி வருகிறது.  ஆசிட் வீச்சால் பாதிகப்பட்ட லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் இப்படத்தில் நடிக்கிறார்.

சபாக் திரைப்படத்தை ‘ராசி' படத்தை இயக்கிய மேக்னா குல்சர் இயக்குகிறார். அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி 'சபாக் 'திரைப்படம் வெளியாகும் என்று படக் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இன்று சபாக் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் (Chhapaak First Look) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் திபீகா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் போன்று தத்ரூபமாக காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் போஸ்டரில் தீபிகாவின் ஒப்பனையையும், படத்தின் ஃப்ஸட் லுக் போஸ்டரையும் பாராட்டி தீபிகா படுகோனுக்கு பலரும் வாழ்த்து தெர்வித்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த லஷ்மி என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு காதலிக்க மறுத்த காரணத்துகாக ஆசிட் வீச்சால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த நிலையில் பலர் இன்னல்களை கடந்து லஷ்மி இப்போது வெற்றிகரமான பெண் மணியாக இருக்கிறார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்விற்கென தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி அவர்களின் சிகிச்சைக்கு லஷ்மி உதவி வருகிறார். இதற்காக 2014ஆம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி லஷ்மியை பெருமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்