விளம்பரம்
முகப்புகோலிவுட்

பாகுபலியில் படைத்தளபதியான ராணாவும், இளவரசனான பிரபாஸும் நிஜ வாழ்க்கையில் எப்படி?

  | February 17, 2017 19:06 IST
Rana Daggubati  Films

துனுக்குகள்

  • 100அடி நீளமுள்ள ஒரு சப் மேரேனை நாங்கள் உருவாக்கி இருந்தோம்
  • ஒளிப்பதிவாளருக்கு மிகவும் விருப்பமான நடிகர் பிரபாஸ்
  • நீண்ட பயிற்சிக்கு பின் தான் ஒரு காட்சியில் நடிப்பார் பாகுபலி
பாகுபலியில் படைத்தளபதியான ராணா, இளவரசனான பிரபாஸின் தோற்றம் நிஜ வாழ்க்கையை விட  திரையில்  பலமடங்கு வித்தியாசமானதாக இருக்கும், அவர்களை பார்க்கும் ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இவ்வாறு தான் இருப்பார்கள் என்று நினைக்கும் அளவிற்கு பாகுபலியில் அவர்களுடைய கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஆனால், ராணா நடித்துவரும் காஸி திரைப்படத்திலும், பிரபாஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளரான மதி, நிஜ வாழ்க்கையில் அவர்கள் இருவரும் எப்படி என்பதை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
 
கடற்படை கமாண்டோவாக ராணா நடித்திருக்கும் காஸி திரைப்படத்தின்  படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார் மதி." ராணா, பாகுபலி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த தருணத்தில் ஒருமுறை அவரை விமானத்தில் சந்தித்தேன், நாங்கள் பேசிய நேரம் முழுவதும் என்னிடம் தமிழில் நன்றாக பேசினார். தெலுகு திரையுலகில் மிகப்பெரிய நடிகர் குடும்பத்தில் இருந்து நடிக்கவந்த கர்வம் துளிகூட அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. பின், நீண்ட நாட்களுக்கு பிறகு காஸி திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்த பொழுதும் அவரை பற்றிய என்னுடைய எண்ணம் சற்றும் மாறவில்லை. பாகுபலி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த பிறகும் தன்னிலை மாறாமல், நம் அருகாமையில் உள்ள நண்பரை போல, என்னிடம் நட்புடன் பழகினார்.
 
prabhas

ஒளிப்பதிவாளர் மதி, ராணாவிடம் காட்சியை விலக்கியபொழுது 

காஸி திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் நடந்து கொண்டிருந்த தருணம், " 100அடி நீளமுள்ள ஒரு சப் மேரேனை நாங்கள் உருவாக்கி இருந்தோம், அதனுள் மட்டும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படப்பிடிப்பு நடந்து வந்தது. அந்த 12 மணி நேரமும் 30நடிகர்களும், 50 படப்பிடிப்பு ஆட்களும் உள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. மிகவும் குறுகிய இடம், நான்குபுறமும் அடைக்கப்பட்ட பகுதி, நீங்களே சிந்தித்து பாருங்கள் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை என்று, அனைவரின் உடம்பில் இருந்து வெளிவரும் வெப்பத்தின் காரணமாக வியர்வை வழிந்த வண்ணம் இருந்தது, அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு  தளத்தில் இருக்கும் ஒளிவிளக்குகளில் இருந்து வரும் வெப்பமும் மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியது. சூரிய ஒளி உள்ளே வருவதற்கான வாய்ப்பே இல்லை படப்பிடிப்பு தளத்தில். அந்த நேரத்தில் ராணா அனைவரிடமும், நம்முடைய உடல்நலம் மிகவும் முக்கியம், ஒவ்வொரு இரண்டு மணிநேர படப்பிடிப்புக்கு நடுவே நாம் மேலே சென்று இயற்கை காற்றினை சுவாசித்துவிட்டு உள்ளே வருவோம் என்று கூறினார். அவர் படப்பிடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்த மாட்டார், இடைவேளை நேரங்களில் உடல்நலத்தினை சரியாக பேணுவதற்கேற்ற ஒரு சில உணவு வகை குறிப்புகளை கொடுப்பார். அவர் மிகவும் எளிமையான மனிதர். அவர் என்னிடம், இயற்கையான காற்றினை சுவாசித்து உடல்பயற்சி செய்வது சிறந்தது ஏனென்றால், ஏற்கனவே பல மணி நேரம் நாம் படப்பிடிப்பு தளத்தில் உள்ளோம் என்று கூறுவார்.

அதன் பிறகு, நீருக்கு அடியில் எடுக்கும் காட்சிகளில் ராணா எந்த ஒரு தயக்கமும் காட்டாமல் நடித்தார். நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ராணா நீரில் மூழ்கி சுட வேண்டும். அந்த காட்சியை மட்டும் பல மணி நேரம் எடுத்தோம். எந்தவொரு நடிகருக்கும் நீரில் மூழ்கி நடிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று, அது மட்டுமில்லாமல்  அந்த காட்சியை முழுவதுமாக எடுத்து முடிக்கும் வரை, ஆடையை மாற்றினால் நேரம் ஆகும் என்பதால், ஈரமான ஆடையுடனே இருந்தார் ராணா,அதை பற்றி அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பலமுறை எங்களுடைய படப்பிடிப்பு தளம் பாதிக்கப்பட்டது, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மற்ற படங்களின் தேதியை ஒதுக்கி வைத்துவிட்டு, இப்படத்திற்க்கென தேதியை ஒதுக்கி நடித்துக்கொடுத்தார். காஸி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து, முடியும் வரை ஒருநாள் கூட ராணாவின் முகத்தில் பொலிவு குறைந்து நான் பார்த்ததே இல்லை. அவர் திரைப்படங்களில் பார்ப்பதை போல் மூர்க்கமான குணம் கொண்டவர் அல்ல, நிஜவாழ்க்கையில் ராணா குழந்தையை போன்றவர்.

பாகுபலி  இளவரசன் பிரபாஸ் பற்றி ஒளிப்பதிவாளர் மதி கூறியவை:
 
rana daggupati

நடிகர் பிரபாஸுடன் படப்பிடிப்பு தளத்திலிருந்து 

பையா, ஸ்ரீமந்துடு, ரன் ராஜா ரன் போன்ற படங்களில் பணியாற்றிய முன்னணி ஒளிபதிவாளரான மதி தற்பொழுது பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திலும் பணியாற்றவிருக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை,ஹைதராபாத், கேரளா, ஐரோப்பா, துபாய் போன்ற இடங்களில்  நடக்கவிருக்கிறது. நடிகர் பிரபாஸுடன்  ஒளிப்பதிவாளர் மதி இரண்டாவதாக இணைகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மிர்ச்சி என்ற படத்தில் பணியாற்றியுள்ளனர் அதனால் அவர்கள் இருவரும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். நிஜவாழ்க்கையில் மிகவும் அமைதியான பிரபாஸ் பற்றி ஒளிப்பதிவாளர் மதி நம்மிடம் " பிரபாஸ் மிகவும் அமைதியான உணர்ச்சிவசமான மனிதர். பாகுபலி திரைப்படத்தில் மிகவும் கம்பீரமான  கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான மனிதர், சத்தமான விஷயங்களை கூட மிகவும் அமைதியாகவே பிரபாஸ் பேசுவார்.படத்திற்கு குரல் கொடுக்கும் நேரத்தில் மட்டுமே சத்தமாக பேசுவார். இவருடைய படப்பிடிப்பு தளம் மிகவும் அமைதியாக இருக்கும், சிறிது சத்தம் கூட அவரை தொந்தரவு அடைய செய்யும்.

சகமனிதர்களிடம் என்றுமே பாசமாக நடந்துகொள்வர் பிரபாஸ், அவருடைய நெருங்கிய நண்பர்களை "செல்லம்" என்று தான் அழைப்பார். கலந்துரையாடலுக்காக, பலமுறை என்னை வீட்டிற்கு  அழைத்துள்ளார், காலை நேரத்தில் என்னை "செல்லம்" என்று அழைத்து  இரவு உணவு குறித்து விசாரித்து, தன்னுடைய வீட்டு சமையல்காரரிடம் பத்து வகையான உணவினை சமைக்கும்படி கூறுவார். பிரபாஸினை சுற்றி எப்பொழுதுமே நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள்.

ஒரு நடிகராக, எந்த விஷயத்தையும் மிகவும் சரியாக செய்பவர் பிரபாஸ். அவர் நடிக்கும் படங்களின் கதாபாத்திரம் குறித்து நீண்ட நாட்கள் விவாதித்த பின் அந்த கதாபாத்திரத்தினை தெளிவாக புரிந்துகொள்வர். ஒளிப்பதிவாளருக்கு மிகவும் விருப்பமான நடிகர் பிரபாஸ் ஏனென்றால், கேமரா கோணங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடிப்பார். தன்னுடைய கதாபாத்திரத்தில் என்றுமே மிகுந்த கவனத்துடன் இருப்பர், நீண்ட பயிற்சிக்கு பின் தான் ஒரு காட்சியில் நடிப்பார். அவரிடம் ஒரு முறை பணியாற்றினால் மீண்டும், மீண்டும் பணியாற்ற தோன்றும்.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்