முகப்புகோலிவுட்

போலி முகவரியில் கார் வாங்கிய சர்ச்சை – கைது செய்யப்பட்டாரா அமலா பால்?

  | January 29, 2018 13:48 IST
Amala Paul Car Case

துனுக்குகள்

  • சமீபத்தில், அமலா பால் எஸ் கிளாஸ் பென்ஸ் காரை வாங்கினார்
  • போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார்
  • அமலா பால் கைது செய்யப்பட்டதாக தண்டோரா போடப்பட்டு வருகிறது
பாபி சிம்ஹாவின் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்கு பிறகு அமலா பால் கைவசம் தமிழில் அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, அறிமுக இயக்குநர்கள் தீபு ராமானுஜம் மற்றும் வினோத்தின் படங்கள் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. சமீபத்தில், அமலா பால் ரூ.1.12 கோடிக்கு எஸ் கிளாஸ் பென்ஸ் காரை வாங்கினார்.

அந்த சொகுசு காரை கேரளாவில் பதிவு செய்திருந்தால், ரூ.20 லட்சம் வரி செலுத்த வேண்டுமாம். ஆகையால், வரி குறையும் என்பதற்காக போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளாராம் அமலாபால். இந்நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த கேரள குற்றப்பிரிவு போலீஸார், நேற்று (ஜனவரி 28-ஆம் தேதி) மாலை அமலா பாலை கைது செய்ததாக திரையுலகில் தண்டோரா போடப்பட்டு வருகிறது.

மேலும், கைதான சில மணி நேரங்களில் கேரள உயர்நீதி மன்றம் அளித்த முன்ஜாமீனை அடிப்படையாக கொண்டு அமலா பாலை விடுவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமலா பால் தரப்பில் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே. அமலா பால் சென்னையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்