முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா அட்லி?

  | February 09, 2018 13:56 IST
Atlee Next Film

துனுக்குகள்

  • ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அட்லி
  • ‘மெர்சல்’ தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகி மெகா ஹிட்டானது
  • அட்லியின் புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் அட்லி.

மேலும், அட்லி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்' மூலம் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தயாரிக்கவும் செய்தார். சமீபத்தில், மீண்டும் விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்திற்காக கூட்டணி அமைத்தார் அட்லி. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார். விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீஸான இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, இது குறித்து அட்லியின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே. அட்லி தனது புதிய படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார். ஹீரோ யாரென இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்