முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி காஜல் அகர்வாலா?

  | July 12, 2018 14:47 IST
Rajini 165 Movie Update

துனுக்குகள்

  • இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது
  • அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்
  • இதில் ரஜினிக்கு ஜோடியாக காஜல் நடிக்கவிருப்பதாக தண்டோரா போடப்படுகிறது
பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், தீபக் பரமேஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது, இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே” என்று தெரிவித்துள்ளனர். ரஜினியின் 165-வது படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் விரைவில் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்