முகப்புகோலிவுட்

‘விஸ்வாசம்’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்ற போட்டிபோடும் பிரபல நிறுவனங்கள்

  | September 07, 2018 12:23 IST
Ajith

துனுக்குகள்

  • இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இதன் மாஸான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது
  • இப்படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘வீரம், வேதாளம்’ படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் காம்போவில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் 58-வது படத்தையும் சிவாவே இயக்கி வருகிறார். ‘விஸ்வாசம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.

படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்க சில முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. இதில் ‘KJR ஸ்டுடியோஸ்’ கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தான் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தனது நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுக்குமாறு அஜித்திடம் கேட்டுள்ளதாக
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்