முகப்புகோலிவுட்

துல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் காஸ்ட்யூம் டிசைனர்

  | March 10, 2018 12:07 IST
Kannum Kannum Kollaiyadithaal Cast

துனுக்குகள்

  • இதில் துல்கருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • நிரஞ்சனி அகத்தியன் காஸ்டியூம் டிசைனராக சில படங்களில் பணியாற்றியவர்
பீஜாய் நம்பியாரின் ‘சோலோ’ படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங் பெரியசாமி இயக்கும் இதில் துல்கருக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரித்து வர்மா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடத்தில் VJ ரக்ஷன் நடிக்கிறார்.

இது துல்கர் சல்மானின் கேரியரில் 25-வது படமாம். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்து வரும் இதற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘FTS ஃபிலிம்ஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தில் ‘ஸ்ரேயா’ என்ற கேரக்டரில் ‘காஸ்டியூம் டிசைனர்’ நிரஞ்சனி அகத்தியன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்