முகப்புகோலிவுட்

ரஜினியின் 'பேட்ட' செகண்ட் டிராக்குக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்

  | December 06, 2018 12:00 IST
Rajinikanth Petta

துனுக்குகள்

  • ‘பேட்ட’ ரஜினியின் கேரியரில் 165-வது படமாம்
  • இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார்
  • செகண்ட் டிராக்கை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்
ஷங்கரின் ‘2.0' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் ‘பேட்ட' படத்தை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்' அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், ஷபீர், இயக்குநர்கள் சசிகுமார் - மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் செகண்ட் டிராக்கை நாளை (டிசம்பர் 7-ஆம் தேதி)-யும், அனைத்து பாடல்களையும் டிசம்பர் 9-ஆம் தேதியும், படத்தை பொங்கலுக்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, செகண்ட் டிராக்கின் பெயர் ‘ULLAALLAA' என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனமே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, புதிய போஸ்டரையும் ஷேரிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்