முகப்புகோலிவுட்

"தளபதி விஜய்க்கு இதெல்லாம் அசால்ட்டு" - டான்ஸ் மாஸ்டரின் புகழாரம்!

  | June 13, 2018 17:36 IST
Thalapathy

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவின் முன்னணி நடன அமைப்பாளர் செரீஃப்
  • பல முன்னணி ஹீரோக்களுடன் பணிபுரிந்திருக்கிறார்
  • சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் பற்றி பேசியிருக்கிறார்
நடன இயக்குநர் ஷெரீப் மொய்தீன் தென்னிந்திய சினிமா துறையில் பல திரைப்படங்களில் பணிபுரிந்த பிரபல நடன இயக்குனர் ஆவார். இவர் தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகர் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

"எவ்வளவு கடினமான நடன அசைவுகளையும் மிக எளிதாக ஆடக்கூடியவர் விஜய். ஒவ்வொரு நடன அசைவையும் கூர்ந்து கவனித்து கற்றுக்கொள்ள நினைப்பார். செட்டுக்குள் வந்துவிட்டால் ரிகர்சல் செய்வதோ, தேவையில்லாமல் டென்ஷன் ஆவதோ எதுவும் அவரிடம் இருக்காது. நாங்கள் ஆடுவதை பார்த்தே கற்றுக்கொள்ளும் அபாரமான திறமை அவரிடம் உண்டு. அதே சமயம், யாருடைய க்ரியேட்டிவிட்டியிலும் தலையிட மாட்டார்.

'தெறி' படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு ஒன்றில், மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடந்தது. விஜய் சாரின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது, ஆனால் சார் அதை எங்களிடமிருந்து மறைத்துவிட்டார். அவர் ஆடும்பொழுது தான், அவருக்கு சுளுக்கு ஏற்பட்டிருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது. நான் பணியாற்றிய நடிகர்களிலேயே மிகவும் அமைதியான, பொறுமையான நடிகர் விஜய்.
எந்த பாடலாக இருந்தாலும், எக்கச்சக்க எனர்ஜியோடு தனக்கே உரிய ஸ்டைலில் ஆடி முடிப்பார். அதுவே, அவரது பாடல்களுக்கு இன்னும் ஸ்பெஷலான நடனங்கள் அமைக்க வேண்டும் என்கிற உத்வகத்தை என்னைப் போன்ற நடன இயக்குநர்களுக்கு அளிக்கிறது. அவர் அப்படி திரையில் ஆடுவதை பார்ப்பதே பேரானந்தம். நடன பின்னணி ஏதும் இல்லாவிடினும் கூட, தன் படங்களுக்கு தானே நடனம் அமைத்துக் கொள்ளுமளவிற்கு திறமையானவர் தளபதி விஜய். அவர் அப்படி செய்தால், நிச்சயம் சிறப்பாக வரும்.' என்று கூறினார் டான்ஸ் மாஸ்டர் ஷெரிப்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்