முகப்புகோலிவுட்

மணிரத்னம் படத்தில் நடிக்கும் பிரபல மாடல்

  | February 13, 2018 16:38 IST
Dayana Erappa

துனுக்குகள்

  • மணிரத்னம் இயக்கும் புதிய படம் `செக்கச் சிவந்த வானம்'
  • சிம்பு, விஜய் சேதுபதி எனப் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்
  • இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் பிரபல மாடல் ஒருவர் நடிக்கிறார்
காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கம் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த் சுவாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் எனப் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ள இன்னொருவர் டயானா எரப்பா (Dayana Erappa). பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்ட இவர், மிஸ் இந்தியா ஃபைனலிஸ்டும் கூட. இந்தப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் டயானா, "என்னுடைய முதல் படமே மணி சாரின் படமாக அமைந்தது பெருமையாக இருக்கிறது" என சிலிர்க்கிறார்.
 
நேற்று முதல் படப்பிடிப்பு துவங்கப்பட்டிருக்கும் இப்படத்திற்காக நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருகிறார் டயானா. இவரது காட்சிகள் மார்ச் மாதம் முதல் படமாக்கப்பட இருக்கிறதாம். மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை லைகாவுடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார் மணிரத்னம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்