முகப்புகோலிவுட்

மொரிஷியஸில் தொடங்கியது ‘தேவி 2’ படத்தின் படப்பிடிப்பு

  | September 18, 2018 16:50 IST
Prabhu Deva

துனுக்குகள்

  • ‘தேவி’ படத்தில் பிரபு தேவா, தமன்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்
  • ‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மீண்டும் கைகோர்க்கும் பிரபு தேவா – விஜய்
  • இதில் முக்கிய வேடத்தில் கோவை சரளா நடிக்கவுள்ளார்
2016-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான படம் ‘தேவி’. இதில் பிரபு தேவா, தமன்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து சமீபத்தில் பிரபு தேவா – விஜய் கூட்டணியில் வெளியான படம் ‘லக்ஷ்மி’.

தற்போது, மீண்டும் ‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக விஜய் - பிரபு தேவா கைகோர்த்துள்ளனர். இதிலும் பிரபு தேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளாராம். இது தவிர 2 முன்னணி நடிகைகளும் நடிக்கவுள்ளனர். அவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறதாம்.
 
மேலும், முக்கிய வேடத்தில் கோவை சரளா நடிக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 18-ஆம் தேதி) முதல் மொரிஷியஸில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இந்த படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்