முகப்புகோலிவுட்

‘வடசென்னை’க்குப் பிறகு மீண்டும் இணையும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி

  | September 05, 2018 12:16 IST
Dhanush Next Film

துனுக்குகள்

  • நடிகராக தனுஷ் கைவசம் 7 படங்கள் உள்ளது
  • இம்மூன்று படங்களையுமே கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்
  • இதில் ஒரு படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளாராம்
சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பிறகு நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இது தவிர தனுஷ் ஒரு பீரியட் படத்தை இயக்கி, நடிக்கவுள்ளார்.

சமீபத்தில், தனுஷ் கால்ஷீட் டைரியில் 3 புதிய படங்கள் இணைந்தது. இம்மூன்று படங்களையுமே ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார். ஏற்கெனவே, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

இந்த 3 படங்களையும் தமிழ் திரையுலகிலுள்ள முன்னணி இயக்குநர்கள் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது, இதில் ஒரு படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளனர். படப்பிடிப்பை தென் மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தனுஷின் ‘பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை’ ஆகிய 3 படங்களையும் வெற்றிமாறன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்