முகப்புகோலிவுட்

மீண்டும் இயக்குநர் சீட்டில் அமரப்போகும் தனுஷ்

  | December 29, 2017 11:45 IST
Dhanush Directorial Next

துனுக்குகள்

  • இப்படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
  • தனுஷ் இயக்கி, நடித்த ‘ப.பாண்டி’ சூப்பர் ஹிட்டானது
  • இது பீரியட் திரைப்படமாக மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம்
சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பிறகு நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் துரை செந்தில் குமாரின் புதிய படங்கள், கென் ஸ்காட்டின் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ ஹாலிவுட் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

சமீபத்தில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க தனுஷ் கமிட்டானார். இப்படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி – ஹேமா ருக்மணி இணைந்து தயாரிக்கவுள்ளனராம். தற்போது, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தனுஷே இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
 
இது தனுஷின் கேரியரில் 37­­-வது படமாம். மெகா பட்ஜெட்டில் பீரியட் திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. வெகு விரைவில் படத்தின் டைட்டில், நடிக்கவுள்ள ஹீரோயின், இதர நடிகர்கள் - பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, தனுஷ் இயக்கி, நடித்த ‘ப.பாண்டி’ (பவர் பாண்டி) சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்