விளம்பரம்
முகப்புகோலிவுட்

போகும்போது எதனையும் நாம் கொண்டுசெல்லப்போவதில்லை - நடிகர் தனுஷ்

  | August 07, 2017 17:54 IST
Celebrities

துனுக்குகள்

  • திரைத்துறையில் போட்டி அவசியம் என்று நான் கருத்தியதே இல்லை
  • திரைப்படம் வெற்றிபெற்றால் நாம் எல்லோருமே வெற்றிபெற்றவர்கள்தான்
  • வெற்றி தோல்வி என்னைப் பாதிக்காது என்பது பொய்க்கு சமம்
என்னுடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களின் தோல்வி என்னை பாதிக்காது என்று சொன்னால் நான் பொய் கூறுவதாக அர்த்தம் என்று நடிகர் தனுஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் கூறும்போது, "திரைத்துறையில் போட்டி மிகவும் அவசியம் என்று நான் கருத்தியதே இல்லை. அதற்கான தேவையும் எனக்கு இதுவரை வந்தது இல்லை. ஒரு திரைப்படம் எந்த ஒரு தடையுமின்றி திரைக்கு வந்து வெற்றிபெற்றால் நாம் எல்லோருமே வெற்றிபெற்றவர்கள்தான். எனக்கு என்னையே போட்டியாளராக கருத்திக்கொள்கிறேன். திரைத்துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தான் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நோக்கம் அது போன்று தான் நானும்.

என் நடிப்பில் வெளிவரும் படங்களின் வெற்றி தோல்வி என்னைப் பாதிக்காது என்று சொன்னால், நான் பொய் கூறுகிறேன் என்று பொருள். பாலிவுட்டில் லெஜண்ட் அமிதாப்பச்சன் அவர்களுடன் ’ஷமிதாப்’ திரைப்படத்தில் இணைந்து நடித்ததை என் வாழ்நாளில் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். அது மிக சிறந்த திரைப்படம். நாம் இறந்து இந்த உயிர் நம் உடலை விட்டு பிரிந்து ஆறடிக்கு கீழே புதைக்கும்போது நம்முடன் எதையும் கொண்டு செல்லப் போவதும் இல்லை’ என்றார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்