முகப்புகோலிவுட்

" `மாரி'யா நடிக்கறது ரொம்ப கஷ்டம்னு தனுஷ் சார் சொன்னார்!" - பாலாஜி மோகன்

  | November 08, 2018 12:44 IST
Dhanush Maari 2

துனுக்குகள்

  • மாரி 2 இயக்கியிருக்கிறார் பாலாஜி மோகன்
  • தனுஷ், சாய்பல்லவி, டொவினோ என பலர் நடித்துள்ளனர்
  • இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது
`காதலில் சொதப்புவது எப்படி?', வாயைமூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். தற்போது மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இதில் சாய் பல்லவி, டொவினோ தாமஸ், க்ருஷ்ணா, வரலட்சுமி எனப் பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

இது பற்றி சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "மாரி 2, மாரி படத்தின் தொடர்ச்சியா இல்லாம மாரிங்கற கதாபாத்திரத்தின் தொடர்ச்சியா மட்டும் இருக்கும். பர்சனலா மாரி கதாபாத்திரத்தை தனுஷ் சாருக்கு பிடிக்கும். `வெளிய இருந்து பாக்கறவங்களுக்கு மாரி கதாபாத்திரத்தில் நடிக்கறது சுலபமா தெரியும். ஆனா, மாரியா நடிக்கறது ரொம்ப கஷ்டம்.

மாரியோட எனர்ஜிய தொடர்ந்து கொடுக்கறதில் கொஞ்சம் சிரமம் இருக்கு'னு தனுஷ் சார் சொல்வார். அது சிரமமா இருந்தாலும் கேரக்டர்குள்ள வந்துட்டார்னா ரொம்ப ஜாலி ஆகிடுவார். மாரி 2 எடுக்கறதுக்கான முதல் காரணமே அதுதான்." எனக் கூறியிருக்கிறார் பாலாஜி மோகன்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்