விளம்பரம்
முகப்புகோலிவுட்

விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் நடிகர் தனுஷ்

  | August 03, 2017 14:14 IST
Celebrities

துனுக்குகள்

  • சங்கராபுரத்திற்கு சமீபத்தில் குடும்பத்துடன் சென்ற இருந்த நடிகர் தனுஷ்
  • குலதெய்வ கோயில் வழிபாட்டில் கலந்து கொண்டார் தனுஷ்
  • சுமார் ரூ.62 லட்ச ரூபாயை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்
தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் ‌உள்ள சங்கராபுரத்திற்கு சமீபத்தில் குடும்பத்துடன் சென்ற இருந்த நடிகர் தனுஷ் தனது குலதெய்வ கோயில் வழிபாட்டில் கலந்து கொண்ட பின் கடும் இன்னல்களை சந்தித்து வரும் விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்‌து சுமார் ரூ.62 லட்ச ரூபாயை அவர்களின் உதவிக்காக வழங்கினார்.

அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் தனுஷ், "விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு, விவசாயிகளைக் காப்பற்றவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய இன்றைய இளைஞர்கள் முன் வரவேண்டும் என்னால் இயன்ற உதவியை தற்போது நான் செய்துள்ளேன் அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள விவசாய பணிகள் பற்றிய கணக்கெடுப்பு எடுத்து, அதனை மையப்படுத்தி ‌விவசாயிகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய திட்டமிட்டுள்ளேன்" என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்