முகப்புகோலிவுட்

சென்சார் சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா!

  | February 18, 2019 12:19 IST
Dhanush Enpt Update

துனுக்குகள்

  • 2016 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
  • தனுஷ் கதாநாயகனாகவும் மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்
  • கவுதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை இயக்குகிறார்
2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா' படம்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

2016 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பித்த இந்த படம் இன்று வரை வெளிவராமல் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் ஆனது.
தனுஷ், மேகா ஆகாஷ் தவிர இந்த படத்தில் சசிகுமார், சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படம் தற்போது சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. யு/ஏ சென்சார் சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்