முகப்புகோலிவுட்

ஃபைனல் ஸ்டேஜில் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'

  | August 31, 2018 11:34 IST
Enai Noki Paayum Thota Shooting

துனுக்குகள்

  • தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி வருகிறார்
  • இதில் முக்கிய வேடத்தில் பிரபல இயக்குநர் சசிகுமார் நடிக்கிறார்
  • இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இதில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், முக்கிய வேடத்தில் பிரபல இயக்குநர் சசிகுமார் நடிக்கிறார். ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் – கே புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்களுடன் இணைந்து கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தர்புகா சிவா இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா – ஜோமன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்கின்றனர்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் 2 டீசர்கள் மற்றும் ‘மறுவார்த்தை, நான் பிழைப்பேனோ, விசிறி’ ஆகிய 3 பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, கெளதம் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “படத்தின் ஃபைனல் ஷெடியூல் மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது” என்று ஸ்டேட்டஸ் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தையும் ஷேரிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்