முகப்புகோலிவுட்

ஹாலிவுட் படத்திற்கு தன் பட பாடல் வரியை டைட்டிலாக வைத்த தனுஷ்

  | May 12, 2018 11:36 IST
Vaazhkaya Thedi Naanum Ponen

துனுக்குகள்

  • இந்தப் படம் இதே பெயரில் உள்ள நாவலின் தழுவலாம்
  • இதன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று இப்படம் திரையிடப்பட்டது
சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பிறகு நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் துரை செந்தில் குமாரின் புதிய படங்கள், கென் ஸ்காட்டின் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ ஹாலிவுட் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதனையடுத்து ஒரு பீரியட் படத்தை இயக்கி, நடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார்.

இதில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற ஹாலிவுட் படத்தை கென் ஸ்காட் எனும் கனடா இயக்குநர் இயக்கியுள்ளார். இந்தப் படம் இதே பெயரில் உள்ள நாவலின் தழுவலாம். தனுஷுடன் BERENICE BEJO, BARKHAD ABDI, ERIN MORIARTY, GERARD JUGNOT ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘BRIO ஃபிலிம்ஸ் – VAMONOS ஃபிலிம்ஸ் – லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் – ஸ்கோப் பிக்சர்ஸ் – M! கேபிடல் வென்சர்ஸ் – இம்பேக்ட் ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ், டீசர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மே 30-ஆம் தேதி ரிலீஸாகுமாம். இந்நிலையில், ஃபிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று (மே 11-ஆம் தேதி) இப்படம் திரையிடப்பட்டது. தனுஷ் உட்பட படக்குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, படத்தின் தமிழ் வெர்ஷன் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். இந்த படத்தை தமிழில் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் டப் செய்துள்ளனராம். இது தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெறும் ஃபேமஸான பாடலின் வரி என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்