முகப்புகோலிவுட்

தனுஷின் ‘மாரி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  | November 02, 2018 11:28 IST
Dhanush

துனுக்குகள்

  • இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி டூயட் பாடி ஆடியுள்ளார்
  • ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் உருவாகுகிறது
2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி'. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி ‘மாரி 2'-விற்காக கைகோர்த்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்' புகழ் சாய்பல்லவி டூயட் பாடி ஆடியுள்ளார்.

கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' மூலம் தயாரிக்கிறார்.
 
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்