2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி ‘மாரி 2’-விற்காக கைகோர்த்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி டூயட் பாடி ஆடி வருகிறார்.
கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய வேடங்களிலும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸும் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசியில் நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பை அடுத்த வாரம் சென்னையில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.