முகப்புகோலிவுட்

துவங்கியது தனுஷ் இயக்கி, நடிக்கும் புதிய பட ஷூட்டிங்

  | September 07, 2018 10:25 IST
Dhanush

துனுக்குகள்

  • இப்படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
  • இது தனுஷின் கேரியரில் 37-வது படமாம்
  • இதில் தனுஷுடன் நாகர்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார் நடிக்கவுள்ளனர்
சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பிறகு நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

சமீபத்தில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க தனுஷ் கமிட்டானார். இப்படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி – ஹேமா ருக்மணி இணைந்து தயாரிக்கவுள்ளனராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தனுஷே இயக்கவுள்ளார். இதை தனுஷே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியிருந்தார்.

இந்த படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் நடிக்கவுள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் நேற்று (செப்டம்பர் 6-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தனுஷ் இயக்கி, நடித்த ‘ப.பாண்டி’ (பவர் பாண்டி) சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்